லலித் மோடிக்கு உடல்நலக்குறைவு
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி கடுமையான உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். 2 வாரங்களில் இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நிமோனியா தாக்குதலால் லண்டனில் உள்ள மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இரண்டு மருத்துவர்கள் 3 வாரங்களாக 24 மணி நேரமும் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags :