கட்சி தாவ தயாராகும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்… நடப்பது என்ன?  

by Admin / 05-10-2021 11:15:56pm
கட்சி தாவ தயாராகும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்… நடப்பது என்ன?  

 


பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி அபார வெற்றி பெற்றதையடுத்து, பா.ஜ.க.வில் இருந்து மேலும் பல எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், திரிணாமுல் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

 மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று 3-வது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சரான பின், அம்மாநில பா.ஜ.க. பின்னடைவை சந்தித்து வருகிறது. பா.ஜ.க. எம்.எல்.

 ஏ.வாக வெற்றி பெற்ற முகுல் ராய், மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அதிர்ச்சி அளித்தார். அவருடன், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் பலர், திரிணாமுல் கட்சிக்கு தாவினர். அடுத்த சில நாட்களிலேயே மேலும் மூன்று பா.ஜ.க. எம்.எல்.
 
ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பவானிபூர் சட்டசபை இடைத்தேர்தலில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அபார வெற்றி பெற்றார். இதனையடுத்து, மேலும் பல பா.ஜ.க. எம்.எல்.
 
ஏ.க்கள் கட்சி தாவ தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க.வில் உள்ள மூத்த தலைவர்கள், புது முகங்களை அரவணைத்துச் செல்ல தயங்குவதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இதனிடையே, பவானிபூர் இடைத்தேர்தலில் 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி, வருகிற 7-ம் தேதி எம்.எல்.
 
ஏ.வாக பதவியேற்க உள்ளார். அவரது பதவிஏற்பு விழாவில் கலந்து கொள்ள ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, மேற்கு வங்க மாநில அமைச்சர் பார்தா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via