இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை
தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.கன்னியாகுமாரி,திருநெல்வேலி,தென்காசி,தேனி,திண்டுக்கல்,திருப்பூர்,கோவை,நீலகிரி,கரூர்,நாமக்கல் சேலம், ,திருச்சி,அரியலூர்,பெரம்பலூர்,புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புண்டு.சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் .நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடுமென்று மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயில் அதிகமாக தகித்துக்கொண்டிருந்த நேரத்தில் திடிரென உருவான அசானி புயலின் காரணமாக தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில மழை பெய்ததால்,மக்கள்மிகுந்த மகிழ்ச்சியைஅடைந்தனர். சென்னையி ல் வாட்டி எடுத்த வெப்பம் குறைந்ததால் ,ஒரு சில நாட்களாக சென்னை மக்கள் வெப்ப சூழலிருந்து விடுபட்டுள்ளனர்
Tags :