மதுரையில் பிரபல ரவுடி சுபாஸ் என்ற போஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.

மதுரை தனக்கும் பகுதியில் கடந்த வாரம் திமுக நிர்வாகி வி கே குருசாமி தங்கை மகன் கிளாமர் காளி என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்
இந்த நிலையில் கொலைக்கு காரணமான வெள்ளை காளி தரப்பைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து வந்த நிலையில் இன்று வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்தசுபாஸ் என்ற சந்திரபோஸ் ஒரு கும்பலோடு ஆயுதங்களை வைத்து கொண்டு சிந்தாமணி அருகே காட்டுப்பகுதியில் தலைமறைவாக இருந்த தகவல் தனிப்படை காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான போலீசாருக்கு தகவல் தெரிந்ததும் தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடிக்க சென்றபோது இவர்களை காவல் ஆய்வாளர் பூமி நாதனை ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிக்க முயற்சித்தனர்.
இந்த நிலையில் ஆய்வாளர் பூமிநாதன் சுட்டதில் சுபாஸ் என்ற சந்திரபோஸ் ரத்த வெள்ளத்தில் என்கவுண்டரில் பலியானார்.காவல் ஆய்வாளர் பூமிநாதன் காயம் ஏற்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்
,ரவுடி காளீஸ்வரன் கொலையில் தேடப்பட்டு வந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் என்கவுன்ட்டர்.மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கி இருந்தவரை பிடிக்கச் சென்ற போது சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : மதுரையில் பிரபல ரவுடி சுபாஸ் என்ற போஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.