பிலிப்பைன்ஸ் நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலர்அவரது குடும்பத்தினருக்கு எதிராக சீனா அதிகாரப்பூர்வமாகத் தடை
பிலிப்பைன்ஸ் நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலர் கில்பர்டோ தியோடோரோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சீனா அதிகாரப்பூர்வமாகத் தடைகளை விதித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் தியோடோரோ சீனாவுக்கு எதிராகத் தொடர்ந்து பொறுப்பற்ற கருத்துக்களை கூறி வருவதாகவும், இது சீனாவின் இறையாண்மை மற்றும் இருநாட்டு உறவை பாதிப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
அண்மையில் சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில், தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் அத்துமீறல்களை தியோடோரோ கடுமையாக விமர்சித்தார். மேலும், சீனாவின் கடல்சார் உரிமைகோரல்களை கற்பனை மற்றும் பொய் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்
தியோடோரோ, அவரது மனைவி மற்றும் அவரது பிள்ளைகள் ஆகியோர் சீனாவின் முக்கியப் பகுதி, ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளுக்குள் நுழைய நுழைவுத் தடைவிதிக்கப்பட்டுள்ளது
.சீனாவில் உள்ள எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ தியோடோரோ மற்றும் அவரது குடும்பத்தினருடன் எந்தவிதமான பணப்பரிவர்த்தனை அல்லது கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கையை ஒரு நட்பற்ற செயல் என்று பிலிப்பைன்ஸ் வண்டியுள்ளது. இத்தகைய தடைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என்றும், இது தூதரக உறவுகளை மேலும் சிக்கலாக்கும் என்றும் பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது
சீனாவின் இந்தத் தடையைப் பற்றி தமக்கு எந்தக் கவலையும் இல்லை என்று தியோடோரோ தெரிவித்துள்ளார்.
சீனாவில் தமக்கு எந்தச் சொத்துக்களும் இல்லை என்றும், அங்கு செல்லத் தமக்கு எந்தத் திட்டமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சீனாவின் ஏமாற்று வேலைகளுக்கு எதிராக உண்மையைப் பேசுபவர்களுக்கு அவர்கள் செய்யும் காரியம் இதுதான்; நாட்டின் நலனுக்காக என் கடமையை நான் தொடர்ந்து செய்வேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்
.இந்தத் தூதரக மோதல், தென்சீனக் கடல் பகுதியில் சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு இடையே தொடர்ந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், இரு நாட்டு உறவில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
Tags :


















