காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு வெளியே வந்து காவலர்கள் பார்த்த போது, மர்ம நபர்கள் தப்பியோடினர். இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள், மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்திலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :











.jpg)







