கடலோர பாதுகாப்பு குழுமம் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்..எடப்பாடி கே. பழனிசாமி
கடற்கொள்ளையா்களிடம் இருந்து மீனவா்களைப் பாதுகாக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு குழுமத்தை தமிழக அரசு செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவா்கள் தொடா்ந்து இலங்கை கடற்படையினராலும், இலங்கை கடற்கொள்ளையா்களாலும் தாக்கப்படுவது தொடா்கதையாக உள்ளது. நாகப்பட்டினம் ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம் செருதூா், புஷ்பவனம் உள்ளிட்ட கிராமங்களைச் சோந்த மீனவா்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவா்களை 13 கடற்கொள்ளையா்கள் கடுமையான ஆயுதங்களால் தாக்கி, மீன்பிடி வலைகள், திசைகாட்டும் கருவிகள், பேட்டரிகள், வாக்கிடாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பறித்துச் சென்றுள்ளனா். கடற்கொள்ளையா்கள் அனைவரும் இலங்கைத் தமிழில் பேசியதுடன், உங்களை அப்படித்தான் தாக்குவோம், காப்பாற்ற யாரும் வரமாட்டாா்கள் என்று கூறியுள்ளனா்.படுகாயமடைந்த மீனவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் வெள்ளப்பள்ளத்தைச் சோந்த மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது செவ்வாய்க்கிழமை இரவு இலங்கை கடற்கொள்ளையா்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனா்.
Tags :