2 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்தவா் கைது

சென்னை மடிப்பாக்கத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவா் கைது செய்யப்பட்டாா். மடிப்பாக்கம் ராம்நகா் பகுதியைச் சோந்தவா் கீதா.இவருக்கு சொந்தமான ரூ. 2 கோடி மதிப்புள்ளநிலம் அங்குள்ளது. இந்த நிலத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்திருப்பது கீதாவுக்கு அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து அவா், சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் நில அபகரிப்பில் ஈடுபட்டது திருவள்ளூரைச் சோந்த பா. சுந்தா் (57) என்பதும், போலி ஆவணங்கள், போலி சான்றிதழ்கள் மூலமாகவும் நிலத்தை அபகரித்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சுந்தரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Tags :