இந்தியாவின் பொருளாதாரம் இருமடங்கு வளர்ச்சி-பிரதமர் நரேந்திர மோடி
'ரைசிங் பாரத் சப்மிட் 2026 'நியூஸ்18 குழுமம் நடத்திய நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி'உள்ளுக்குள் வலிமை என்ற கருப்பொருளில் உரையாற்றினார்.
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் இருமடங்கு வளர்ச்சியடைந்துள்ளதாகவும், விரைவில் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இந்தியா இப்போது ஒரு வளர்ச்சி இயந்திரமாக மாறியுள்ளதாகவும், வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பழைய அடிமைத்தன சிந்தனைகளில்' இருந்து விடுபட்டு, இந்தியா இப்போது சொந்தத் திறமைகளை அடையாளம் கண்டு வருவதாகக் கூறினார். தத் த்வம் அசிஎன்ற தத்துவத்தைக் குறிப்பிட்டு, தேசத்தின் சக்தி மக்களுக்குள்ளேயே இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
சமீபத்திய , ஏ.ஐ உச்சி மாநாட்டைக் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடாக இருந்த இந்தியா, இப்போது தொழில்நுட்பத்தை உருவாக்கும் நாடாக மாறியுள்ளதாகவும்கடந்த காலத்தை விட தற்போது விவசாயிகளுக்குக் கூடுதல் கடனுதவி வழங்கப்படுவதாகவும், பி.எம். கிசான் திட்டம் மூலம் சுமார் 12 கோடி விவசாயிகள் பலன் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags :


















