கண்ணீர் விட்ட கலெக்டர்..கதறியழுத திருநங்கைகள்.

by Staff / 25-06-2025 11:04:00pm
கண்ணீர் விட்ட கலெக்டர்..கதறியழுத திருநங்கைகள்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா நாமக்கலில் இருந்து பணியிட மாற்றம் செய்து அரசு கூடுதல் செயலாளராக சென்னை செல்ல உள்ளார். இந்நிலையில், ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் அலுவலகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இலச்சினை வெளியிட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பெற்றுக் கொண்டார்.

பின்னர், ஆட்சியர் உமா பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திருநங்கைகள் என பல்வேறு தரப்பினர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், திருநங்கைகள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. அதில் நீங்களே மீண்டும் இங்கு ஆட்சியராக வரவேண்டும் எனவும், எங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளீர்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, ஆட்சியர் உமாவுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து கொண்டு மகிழ்ந்தனர். இடத்தில் இருந்த அனைத்து திருநங்கைகளும் நீங்கள் தாய் போல எங்களை பார்த்து கொண்டீர்கள் என்று கண்ணீர் விட்டு அழுத காட்சி காண்போரை மெய் சிலிர்க்க  வைத்தது. உடனே நீங்க அழாதீங்க என்று ஆட்சியரும் கண்ணீருடன் அவர்களை அனுப்பி வைத்தார்.

 

Tags : கண்ணீர் விட்ட கலெக்டர்..கதறியழுத திருநங்கைகள்.

Share via