சாம்சங் சேவை மையத்தில் தீ விபத்து

by Admin / 16-11-2021 06:48:15pm
சாம்சங் சேவை மையத்தில் தீ விபத்து

 

சாம்சங் சேவை மையத்தில்  தீ விபத்து.

மும்பையில் சாம்சங் சேவை மையத்தில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கஞ்சூர்மார்க் பகுதியில் உள்ள சாம்சங் சேவை மையத்தில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

 தீ அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவ, அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நான்கு தண்ணீர் டேங்கர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கட்டுக்கடங்காமல் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டனர்.
 
 தீவிபத்தில் இதுவரை எத்தனை பேர் காயமடைந்துள்ளனர்? அல்லது யாரேனும் உயிரிழந்துள்ளனரா? என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே, மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo