அரசு ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க திட்டம்
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், அந்நாடு செலவீனங்களை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அதன் ஒருபகுதியாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10% குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. தேசிய செலவீன கட்டுப்பாட்டு ஆணையம் இந்த பரிந்துரையை அந்நாட்டு பிரதமருக்கு வழங்கியுள்ளது. மேலும் அரசு துறையில் ஒதுக்கப்படும் நிதியையும் 15% குறைப்பதற்கும், மத்திய, மாநில அமைச்சர்களின் எண்ணிக்கையை 78ல் இருந்து 30-ஆக குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
Tags :