மெட்ரோவில் அதிகமுறை பயணம் செய்யும் பயணிகளுக்கு பரிசு பொருட்கள் அறிவிப்பு

by Staff / 25-11-2022 01:37:25pm
மெட்ரோவில் அதிகமுறை பயணம் செய்யும் பயணிகளுக்கு பரிசு பொருட்கள் அறிவிப்பு

சென்னை மெட்ரோவில் அதிக முறை பயணம் செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோவில் அதிகமுறை பயணம் செய்யும் 30 பயணிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அதில் முதல் 10 பேருக்கு ரூ.2000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருட்கள் தரப்படும். மேலும் 30 நாட்களுக்கு விருப்பம்போல் பயணம் செய்வதற்கான மெட்ரோ பயண அட்டையும் பரிசாக வழங்கப்படும் என கூறியுள்ளது.

 

Tags :

Share via