பச்சை நிற ஆவின் பால் விற்பனை நிறுத்தம்? ஆவின் நிறுவனம் விளக்கம்

by Staff / 18-10-2024 03:00:47pm
பச்சை நிற ஆவின் பால் விற்பனை நிறுத்தம்? ஆவின் நிறுவனம் விளக்கம்

பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விற்பனை மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும், "மக்கள் நலன் கருதி இதர கொழுப்பு சத்துகளை உயர்த்தி புதிய வகை பால் அறிமுகம் செய்ய ஆய்வு மட்டுமே நடக்கிறது. எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் நிறுவனம் விற்பனை செய்ய தொடங்கவில்லை. புதிய வகை பாலை விற்பனை செய்ய தொடங்கும் பட்சத்தில் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும்" என்று கூறியுள்ளது.

 

Tags :

Share via