எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சு அவரது தோல்வி பயத்தை காட்டுகிறது என்று முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் விமர்சனம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலினை குறிப்பிட்டு பேசி வரும் கருத்து அரசியல் அரங்கில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது . அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் , திமுக ஆட்சியில் வறட்சி, வெள்ளம், புயல் அல்லது கொரோனா போன்ற பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை . ஒருவேளை திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால் முதலமைச்சர் ஸ்டாலின் போய் இருப்பார் என்று கூறினார் . இதற்கு திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சு அவரது தோல்வி பயத்தை காட்டுகிறது என்று முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். .தனக்கு மரண பயம் கிடையாது என்றும் மக்களை காக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார் .பெரியார், அண்ணா ,காமராஜர் போன்ற தலைவருடன் பழகிய தனக்கு இப்படிப்பட்ட கீழ் தரமான பேச்சுக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வருத்தமளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். .எடப்பாடி பழனிச்சாமி தான் தவறாக எதுவும் பேசவில்லை என்றும் கொரோனா காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் மக்களை நேரில் சந்திக்காமல் போட்டோஷூட் நடத்திக் கொண்டிருந்தார் என்பதையே தான் சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Tags :



















