900 படுக்கைகள் ஆக்சிசன் இணைப்புடன் இருப்பதாக தூத்துக்குடி எம்.பி.கனிமொழி கருணாநிதிதகவல்.

by Editor / 08-01-2022 03:02:40pm
 900 படுக்கைகள் ஆக்சிசன் இணைப்புடன் இருப்பதாக தூத்துக்குடி எம்.பி.கனிமொழி கருணாநிதிதகவல்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு செய்தார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி. அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன், கொரோனா, ஓமிக்ரான் ஆகியவற்றைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசித்தார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். 

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1,200 படுக்கை தயார் நிலையில் இருப்பதாகவும், அதில் 900 படுக்கைகள் ஆக்சிசன் இணைப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 200 பேருக்கு மேல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளன. அதில் யாரும் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 35 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அதில் 5 பேர் மட்டும் ஆக்சிசன் கொடுக்கப்பட்டுள்ளது.  ஓமிக்ரான் மிகப் பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும், வேகமாகப் பரவக்கூடியது என்று தெரிவித்தார்.

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆகியோர் உடனிருந்தார்.

 900 படுக்கைகள் ஆக்சிசன் இணைப்புடன் இருப்பதாக தூத்துக்குடி எம்.பி.கனிமொழி கருணாநிதிதகவல்.
 

Tags :

Share via