வங்கி ஏடிஎம் இயந்திரத்தில்  நூதன முறையில் பணம் திருடிய ஊழியர் 

by Editor / 23-06-2021 06:19:53pm
வங்கி ஏடிஎம் இயந்திரத்தில்  நூதன முறையில் பணம் திருடிய ஊழியர் 

 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த கட்டிடத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. அதில் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் ஏடிஎம்மில் வைக்கப்பட்டிருந்த ரூ.2,05,700 மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதுதொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது வங்கியின் தற்காலிக ஊழியர் இளையராஜா ஏடிஎம் லாக்கரின் சாவியை எடுத்து அதிலிருந்து பணத்தை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து இளையராஜாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1,80,500 ரூபாயை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo