பட்டப்பகலில் சுட்டுக்கொலை.. பரபரப்பு

by Staff / 01-04-2023 04:26:22pm
பட்டப்பகலில் சுட்டுக்கொலை.. பரபரப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் பட்டப்பகலில் தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள பன்மோர் நகரில் துணி வியாபாரி பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். கடைக்குள் புகுந்த இரு மர்ம நபர்கள் துணி வியாபாரியை சுட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via