போட்டோவை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபர் கைது

செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த இளம்பெண் செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இருந்து என்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து யாரோ ஒரு மர்மநபர் முகநூல் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருவதாக நேரடியாக ஆஜராகி துணிச்சலாக புகார் அளித்துள்ளார்.
கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சிவக்குமர், காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் மர்மநபரை தீவிரமாக தேடி வந்தனர். பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கணேசனின் மகன் முனீஷ்வரன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தயவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :