2021 ஆண்டில் 4 மாநிலத்தில் மட்டும் 1.92 இலட்சம் பெண்கள் காணாமல்போனதாக தகவல்.

மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போன சம்பவங்களில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் வெளியிட்ட விவரத்தின்படி, 2021 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் 56,498 பெண்கள் மற்றும் இளம் பெண்களைக் காணவில்லை என்றும் , மத்தியப் பிரதேசத்தில் 55,704பெண்கள் மற்றும் இளம் பெண்களைக் காணவில்லை என்றும் , மேற்கு வங்கத்தில் 50,998 பெண்கள் மற்றும் இளம் பெண்களைக் காணவில்லை என்றும் மற்றும் ஒடிசாவில் 29,582 பெண்கள் மற்றும் இளம் பெண்களைக் காணவில்லைஎன்றும் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆந்திரா 14வது இடத்திலும், தெலுங்கானா 11வது இடத்திலும் உள்ளன. அதே போல் பாலியல் சீண்டல், பலாத்காரம், கொலைக் குற்ற வழக்குகளில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
Tags :