இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம் சட்ட திருத்த மசோதா தாக்கல்.

by Editor / 28-11-2022 06:39:11am
இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம் சட்ட திருத்த மசோதா தாக்கல்.

மத்திய அரசு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிறப்பு - இறப்பு பதிவு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது. இந்த மசோதா தாக்கல் ஆனால் அரசு வேலை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பெறவும், கல்வி நிறுவனங்களில் சேரவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வரைவு மசோதா தொடர்பாக கடந்த ஆண்டே மாநிலங்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை அடிப்பையாக்  கொண்டே இந்த சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

 

Tags :

Share via