by Staff /
06-07-2023
05:13:41pm
ஆளும் கட்சியில் உள்ள ஊழல்வாதிகளை பாதுகாப்பதிலேயே கவனமாக செயல்படுவது வெட்கக் கேடானதாகும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா அரசின் பொம்மை முதலமைச்சருக்கு, நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எடுத்து வைக்கக்கூடிய பிரச்னைகளுக்கு எந்தத் தீர்வையும் காணாமல், ஆளும் கட்சியில் உள்ள ஊழல்வாதிகளை பாதுகாப்பதிலேயே கவனமாக செயல்படுவது வெட்கக் கேடானதாகும். கோவை மாவட்டத்தில், விடியா திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் ஜவுளித் தொழிலும், நூற்பாலைத் தொழிலும் நலிவடைந்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
Tags :
Share via