by Staff /
06-07-2023
05:17:27pm
அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், எஸ்.முரளி (எ) ரகுராமன் (விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்'' என பதிவிட்டுள்ளார்.
Tags :
Share via