அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழப்பு...

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கருமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 42) இவருக்கு திருமணம் ஆகி சுபாஷினி என்ற மனைவியும், சுவாஷிஹா, இரம்மபொக்கிஷா என்கிற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். கணித ஆசிரியரான இவர் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 ஆண்டுக்கும் மேலாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் இன்று பள்ளிக்கு வந்த அவர் பள்ளியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார் இதனை அறிந்த சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Tags :