சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை.இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டுபூஜை நிறைவு பெறுகிறது.

by Editor / 27-12-2023 09:51:09am
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை.இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டுபூஜை நிறைவு பெறுகிறது.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் கடந்த 41 நாட்களாக நடைபெற்ற மண்டல பூஜை இன்று நிறைவு பெறுகிறது.
காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான முகூர்த்த வேளையில் மண்டல பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பின்னர் பிற்பகல் 1 மணிக்கு வழக்கம்போல் நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். தொடர்ந்து இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை நிறைவு பெறுகிறது. ஐயப்பனை தரிசிக்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்துள்ளதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags : பூஜை நிறைவு பெறுகிறது

Share via