பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 3கோடியே 99 லட்சம் பணம் பறிமுதல்.

by Editor / 07-04-2024 10:52:52am
 பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 3கோடியே 99 லட்சம் பணம் பறிமுதல்.

தாம்பரம் ரெயில்நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4 கோடி பணம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலில் படி தாம்பரம் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனையிட்டனர்.

அப்போது எஸ்.7 கோச்சில் 3 நபர்கள் 6 பைகளில் கட்டுகட்டாக பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது இதனை அடுத்து மூன்று நபர்களை கைது செய்த போலீசார் தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். .

அப்போது அந்த மூன்று நபர்களும் நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நைனார் நாகேந்திரனுக்கு சொந்தமான  புரசைவாக்கத்திலுள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும் இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர் .

இதனை அடுத்து, இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்படி இணை ஆணையர் மகேஸ்வரி மற்றும் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் பணத்தை எடுத்து வந்த சதீஷ் (வயது 33) நவீன் (வயது 31) பெருமாள் (வயது 25) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜன் முன்னிலையில் போலீசார் கருவுலத்தில் ஒப்படைத்தனர்.தேர்தல் பண பட்டுவாடா செய்வதற்காக பணம் நெல்லைக்கு எடுத்து செல்லப்படுகிறதா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ள போலீசார்நயினார் நாகேந்திரனிடமும் இது குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

Tags :  பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 3கோடியே 99 லட்சம் பணம் பறிமுதல்.

Share via