பாஜகவில் இருந்து யார் விலகினாலும் கண்டுக்கொள்ள வேண்டாம் - அண்ணாமலை

பாஜகவில் இருந்து யார் விலகினாலும் கண்டுக்கொள்ள வேண்டாம் என அக்கட்சியின் மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டுள்ள அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் தான் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை வரும். செட்டிங் பாலிட்டிக்ஸ் செய்பவர்களுக்கு பாஜகவில் இடமில்லை. கடுமையாக உழைத்து வெற்றிக் கனியை பறிக்கக்கூடிய வேட்பாளரைத்தான் பிரதமர் மோடி சிதம்பரம் தொகுதியில் நிறுத்தியிருக்கிறார்.
Tags :