மதுரை முருக பக்த மாநாடு; மின்னொளி யில் ஜொலிக்கும் திடல்.

மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை முருக பக்தர் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக இரவிலும் நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் மேடையில் அறுபடை வீடுகள் அமைப்பு அமைக்கப்பட்டு மின்னொளியில் மாநாட்டு மேடை ஜொலிக்கிறது.
மாநாட்டின் சிறப்பம்சமாக அறுபடை வீடுகளின் முருகனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5நாட்களில் 75 ஆயிரம் பேர் வந்து தரிசனம் செய்துள்ளனர் நாளையும் அதிக அளவில் மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.முருக பக்தர்கள் மாநாட்டு மேடை, ஒரு லட்சத்திற்கும் அதிகமான இருக்கைகள், மின்விளக்கு கோபுரம் என அமைக்கப் பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். முருக பக்தர்கள் மாநாட்டில் கின்னஸ் சாதனை முயற்சியாக 5 லட்சம் பக்தர்கள் ஒன்றாக இணைந்து பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags : மதுரை முருக பக்த மாநாடு