கந்துவட்டி கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு.

by Staff / 02-12-2022 03:50:19pm
கந்துவட்டி கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு.

குமரி மாவட்டத்தில் கந்துவட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் தக்கலை மூலச்சல் பகுதியைச் சேர்ந்த சீமோன் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் விலவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஞானஜெபின் அதிக வட்டி வசூல் செய்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசை விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.இன்ஸ்பெக்டர் உமா சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். ஞானஜெபின், அவரது மனைவி பெனிலா மற்றும் ஞான ஜெபியின் நண்பர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த ஞானஜெபின் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று மாலை அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டில் இருந்த சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். கைப்பற் றப்பட்ட ஆவணங்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலை மறைவாகியுள்ள ஞான ஜெபின் மற்றும் அவரது நண்பரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஞான ஜெபின் காங்கிரஸ் பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

Tags :

Share via

More stories