நேபாளத்தில் மன காமனா கோவிலுக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற ஏழு பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் மன காமனா கோவிலுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றபொள்ளாச்சி மற்றும் தேவகோட்டையைச் சேர்ந்த 24 பேர் தரிசனம் முடிந்து திரும்பும் போது அவர்கள் பயணம் செய்த மினி பேருந்து மத்திய நேபாளத்தின் கோர்க் மாவட்டத்தில் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது ..இந்த விபத்தில் 5 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என மொத்தம் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் காயமடைந்து அங்குள்ள சித்துவான் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .உயிரிழந்தவர்களில் பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் அவரது மனைவி மீனா மற்றும் அனாமலிக், மீனாட்சி ,சிவகாமி, விஜயாள் ,தமிழரசி ஆகியோர் விபத்தில் பலியானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு கொண்டு வர தமிழக அரசு மற்றும் மத்திய வலியுறவுத்துறை அமைச்சகம் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது. உழல்கள் காத்தமாண்டுவில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பின் விமான மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அரசின் இலவச வாகனங்கள் மூலம் இறந்தவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















