ஆட்டோவில் அளவுக்கு அதிகமான மாணவ,மாணவிகளை ஏற்றி அனுப்பிய பள்ளி நிர்வாகம்.

by Editor / 30-03-2022 06:28:23pm
ஆட்டோவில் அளவுக்கு அதிகமான மாணவ,மாணவிகளை ஏற்றி அனுப்பிய பள்ளி நிர்வாகம்.

தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், ஆலங்குளம்,கீழப்பாவூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர்  தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இருப்பது வழக்கம் பள்ளியில் ஆசிரியர்கள் குறைந்து விடக்கூடாது என்பதற்காக இந்த தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து பக்கத்து கிராமங்களிலிருந்து மாணவர்களை தனியார் வாகனங்கள் மூலமும் ஆட்டோக்கள் மூலமும் பள்ளிக்கு அழைத்து வருவது வாடிக்கையாக பல ஆண்டு காலமாக இருந்து வருகின்றது.

  தென்காசி மாவட்டத்தில் ஏரளாமான  அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன.கீழப்பாவூர் வட்டாரத்தில் சுமார் 20 அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்  செயல் பட்டுவருகின்றன.அதில் TDTA கல்வி நிறுவனங்கள் மட்டும் 12க்கும் மேல் செயலபட்டுவருவதாக கூறப்படுகிறது.இந்த செயல்பாடுகளை செய்து வருகின்றது இந்த நிலையில் 29 ஆம் தேதி அன்று பாவூர்சத்திரம் அருகே உள்ள மருதடியூர், மற்றும் சாலடியூரில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகத்தின் செலவில் இயக்கப்பட்டு வரும் 3 வாடகை ஆட்டோக்களில் குப்பை போன்று குவியலாக கும்பலாக மாணவ மாணவிகளை ஏற்றி வந்துள்ளனர்.இந்த நிலையில் 29 ஆம் தேதியன்று 1ஆட்டோ பழுதடைந்தவிடவே  மற்ற 2 ஆட்டோக்களில் மாணவ,மாணவிகளை அழைத்து வந்துள்ளனர்.

அப்பொழுது ஆவுடையானூர் பேருந்து நிலையத்திற்கு மேல்புறம் உள்ள டிடிடி ஏ பள்ளிக்கு மாணவ,மாணவிகளை குப்பை போல ஏற்றி வந்ததைக்க கண்ட சமூக ஆர்வலர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பல ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்களை திட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் மாணவ-மாணவிகளை குப்பை போன்று  குவியலாக அள்ளிப் போட்டுக் கொண்டு வந்த ஆட்டோவை   வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும்  மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவின் பேரில் கீழப்பாவூர் தொடக்கக் கல்வி அலுவலர் முத்துலிங்கம் தலைமையில் பள்ளியில் சென்று விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் பாவூர் சத்திரம் காவல்நிலையத்தில் தலைமையாசிரியரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும் தென்காசி மாவட்டத்தின் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி சென்ற ஆவுடையானூர் ஆட்டோ ஓட்டுனர் ஆத்தியப்பன் (38) மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது

ஆட்டோவில் அளவுக்கு அதிகமான மாணவ,மாணவிகளை ஏற்றி அனுப்பிய பள்ளி நிர்வாகம்.
 

Tags :

Share via