பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

by Editor / 01-12-2023 08:19:49pm
பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி காரைக்குடி மற்றும் மானாமதுரை ராமேஸ்வரம் பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த பகுதி ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி - காரைக்குடி சிறப்பு ரயில் (06829) ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் கிறிஸ்துமஸ் தினம் தவிர டிசம்பர் 31 வரை திருச்சியில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக  மதியம் 12.15 மணிக்கு 120 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும். மேலும் திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி விரைவு ரயில்கள் (16849/16850) வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் கிறிஸ்துமஸ் தினம் தவிர டிசம்பர் 31 வரை மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும். ஏற்கனவே பாம்பன் பால வேலை காரணமாக இந்த ரயில் ராமநாதபுரம் வரை இயக்கப்பட்டு வருகிறது. ஆகவே இந்த ரயில் மானாமதுரை - ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 

Tags : பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

Share via