8,10ஆம் தேதிகளில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 07-03-2023 08:21:09am
 8,10ஆம் தேதிகளில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு  வாய்ப்பு.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இன்று (செவ்வாய்க்கிழமை) வறண்ட வானிலை நிலவக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 

Tags :

Share via

More stories