சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது:மூன்று சொகுசு கார்கள்,எட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல்

by Editor / 07-03-2023 08:15:13am
சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது:மூன்று சொகுசு கார்கள்,எட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மன்னார்குடி அருகே மெய்ப்பழத்தோட்டம் என்கிற இடத்தில் செந்தமிழ்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நத தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட தென்னந்தோப்புக்கு டி.எஸ்.பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ்  மற்றும் காவல்துறையினர் அதிரடியாக அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு  சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை சுற்றி காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். மேலும் பிரேம்குமார் (35), பிரபாகரன் (38)  ஆகியோர் உள்ளிட்ட 12 நபர்களை கைது செய்தனர்.மேலும் ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்  ரொக்க பணம் மற்றும் அவர்கள் பயணித்து வந்த 3 சொகுசு கார்கள், 8 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo