இந்திய எல்லையில் மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகு இந்திய கடற்படையினரால் சிறைபிடிப்பு

by Editor / 02-05-2022 05:00:39pm
இந்திய எல்லையில் மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகு  இந்திய கடற்படையினரால் சிறைபிடிப்பு

 நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 6பேர் மற்றும் ஒரு விசைப்படகை இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.விசாரணைக்கு பின்னர் நாகை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
   
          நேற்று மாலை நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த 6இலங்கை மீனவர்கள் மற்றும் படகையும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் படகினை இந்திய கடலோர காவற்படைக்கு சொந்தமான அமையா ரோந்து கப்பல் மூலம் காரைக்கால் துறைமுகம் கொண்டு வந்தனர்.கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த சிங்கள மீனவர்கள் 6பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கடந்த மாதம் 21ம் தேதி இலங்கை திரிகோணமலையிலிருந்து அனுரா என்பவருக்கு சொந்தமான விசை படகில் மீன்பிடிக்க புறப்பட்டுள்ளதும்,நேற்றைய தினம் எல்லை தாண்டி இந்திய கடல் பரப்பில் மீன்பிடிக்க முற்பட்ட போது இந்திய கடற்படையிடம் சிக்கி கொண்டதும் தெரிய வந்தது.கைது செய்யப்பட்ட 6பேரும் திரிகோணமலை சேர்ந்த மதுஷா,அமிலா மசங்கா,சுஜித் பண்டாரா,புதிகா, உஷன் மதுசன்,துங்கா மகேலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நாகை கடலோர காவல் குழும போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

Tags :

Share via