2021ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

by Editor / 04-10-2021 07:12:55pm
2021ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2021ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுட்டியன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று ஸ்வீடனில் உள்ள நோபல் பரிசு வழங்கும் கரோலின்ஸ்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.


உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்றைய தினத்தில் இருந்து அக்டோபர்11-ந்தேதி வரை அறிவிக்கப்படுகிறது.
அந்த வகையில், 2021ம் ஆண்டின் மருத்துவத்திற்கான  (Physiology or Medicine) நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது.


அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் ஆகியவை நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம், அது அனுப்பும் சமிக்ஞைகள் குறித்த விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு, பல்வேறு உடலியல் செயல்முறைகளில் அவற்றின் செயல்பாடுகளை தெளிவுபடுத்துவதுடன் நாள்பட்ட வலி உள்பட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படுகிறது.வெப்பம், உடல் வலியை தொடாமல் உணரும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
 

 

Tags :

Share via