வரலாறு காணாத வெப்பம் இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனம்

இங்கிலாந்தில் நிலவும் உச்சபட்ச வெட்பம் காரணமாக தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என பிரிட்டன் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .இரவு நேரத்திலும் வெப்பம் அதிகம் காணப்படும் என்றும் அதிகபட்சமாக நகர்புறங்களில் வெப்பநிலை உச்சம் தொடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உச்ச பட்ச வெப்ப நிலை நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :