அரசு அலுவலக்கத்தில் குப்பையில் வீசப்பட்ட மறைந்த முதல்வரின் புகைப்படம்.

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தை சிலர் எடுத்து அருகாமையில் உள்ள குப்பையில் போட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்ற சிலர் அதைப் பார்த்து மறைந்த முதல்வருக்கே இந்த நிலைமையா என்று அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய நிலையில், இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது வைரலான நிலையில், தகவல் அறிந்து தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வைத்தே, புகைப்படத்தை எடுத்து மீண்டும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் கொண்டு சென்றனர்.
இருந்தபோதும், மறைந்த முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தை குப்பையில் போட்ட அதிகாரிகள் யார்? அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : அரசு அலுவலக்கத்தில் குப்பையில் வீசப்பட்ட மறைந்த முதல்வரின் புகைப்படம்.