சிறுமிகளை கடத்தி பலாத்காரம்.. திடுக்கிடும் தகவல்

by Editor / 17-03-2025 05:41:59pm
சிறுமிகளை கடத்தி பலாத்காரம்.. திடுக்கிடும் தகவல்

குமரி மாவட்டம் தக்கலை அருகே மாயமான சகோதரிகளான இரு சிறுமிகளும் 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர். சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கறிஞர் அஜித் குமார் (32) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில், தாய் திட்டியதால் சகோதரிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். போகும் வழியில் இறக்கி விடுவதாகக் கூறி அஜித் குமார், சிறுமிகளை பைக்கில் ஏற்றிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via