நிதியமைச்சர் திடீர் ராஜினாமா..

பாஜக ஆளும் உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் மலைவாழ் மக்கள் குறித்து கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அழுதபடியே பேட்டியளித்த அவர், "எனது வார்த்தைகளுக்கும் அவை ஏற்படுத்திய தாக்கத்திற்கும் நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். எனது மாநிலம் வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். எனது பங்களிப்பு என்னவாக இருந்தாலும், அதை நான் செய்வேன்" என்று கூறியுள்ளார்.
Tags :