நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் -முதல் நாளிலேயே இரு அவைகளும் ஒத்தி வைப்பு.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் பெரும் அமளி மற்றும் வாக்குவாதங்களுடன் தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படும் அளவுக்கு பரபரப்பான சூழல் தோன்றியது. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபட்டனர் .பல அலுவலர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரமும் இதில் முக்கியத்துவம் பெற்றன. டெல்லி- செங்கோட்டையில் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் தேசிய பாதுகாப்பு நிலவரம் குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். அத்துடன், புகையிலை மற்றும் அது தொடர்பான தயாரிப்புகளுக்கு கலால் வரி விதிக்கும் மசோதாக்கள் உள்பட 3 மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் நடந்த அமளி- கூச்சல் குழப்பத்தை தவிர்க்க வேண்டும். கூட்டத் தொடர் சுகமாக நடத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் பிரதமர் நரேந்திர மோடி விடுத்திருந்தார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக இருந்ததால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
Tags :














.jpg)




