தி நகரில் உள்ள சிபிஎம் மாநில அலுவலகத்தில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

by Admin / 05-05-2026 03:15:21pm
தி நகரில் உள்ள சிபிஎம் மாநில அலுவலகத்தில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை விடுதலைச் சிறுத்தை கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் 11 மணி அளவில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சந்திப்பிற்கு பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் தி நகரில் உள்ள சிபிஎம் மாநில அலுவலகத்தில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் ஈடுபட்டனர். இவ்வாலோசனைக்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய திருமாவளவன் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு  கூட்டணியிலேயே நீடிக்கப் போவதாக தெரிவித்தனர். அத்துடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பீர்களா என்று கேட்டதற்கு ஒருங்கிணைந்து ஆலோசித்து முடிவு எடுக்கப் படும் என்று தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திருச்சி கிழக்குத் தொகுதியை விஜய் ராஜினாமா செய்தால் ஒரு தொகுதி குறையும். இத்துடன் கட்சியிலிருந்து ஒருவரை சபாநாயகராக ஆக்கும் பொழுது அந்த வாக்கும் கணக்கில் வராது என்பதால் மொத்தம் 106 என்கிற கணக்கிலேயே இன்னும் 12 ஆதரவு எம்எல்ஏ பெற்றால் மட்டுமே கூட்டணி ஆட்சி அமைக்க முடியும். கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகள் பொறுத்தே அடுத்த நகர்வுகள் உருவாகும்.

 

Tags :

Share via
Logo