ஒரு ஓட்டு வித்தியாசத் தோல்வியை எதிர்த்து திமுக வழக்கு - உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான பெரியகருப்பன், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும், திமுக வேட்பாளர் பெரியகருப்பன் 83,374 வாக்குகளும் பெற்றனர். இந்த ஒரு ஓட்டு வித்தியாசத் தோல்வியை எதிர்த்து திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் இறுதிக்கட்டத்தின் போது பெரியகருப்பன் 30 வாக்குகள் முன்னிலையில் இருந்தார், ஆனால், இறுதிச் சுற்றில் தவெக வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக திமுகவினர் மறுவாக்கு எண்ணிக்கை கோரி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Tags :


















