5 நாட்களுக்குத் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

by Editor / 31-03-2023 08:42:52am
 5 நாட்களுக்குத் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தென் இந்தியப் பகுதிகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via