ஆகஸ்ட்டில்  காணிக்கையை அள்ளிக்கொடுத்த பக்தர்கள்..

by Editor / 02-09-2023 06:41:20am
ஆகஸ்ட்டில்  காணிக்கையை அள்ளிக்கொடுத்த பக்தர்கள்..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் தரிசனத்திற்கு செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள், கோடிக்கணிக்கல் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த மாதம் கோயிலுக்கு சென்ற பக்தர்களின் எண்ணிக்கை, மற்றும் காணிக்கை தொகையை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், சுமார் 22 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 120 கோடியே 5 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருப்பதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags : ஆகஸ்ட்டில்  காணிக்கையை அள்ளிக்கொடுத்த பக்தர்கள்..

Share via

More stories

Logo