இன்ப அதிர்ச்சி ரஜினிகாந்துக்கு இன்ப அதிர்ச்சி.

சன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, ரஜினிக்கு BMW X7 காரை பரிசாக கலாநிதி மாறன் வழங்கினார்.
வெவ்வேறு கார்கள் ரஜினிக்கு காண்பிக்கப்பட்ட நிலையில், அவர் BMW X7 காரை தேர்வு செய்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ படம் உலக அளிவில் ரூ.600 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது.
Tags :