மலையாள நகைச்சுவை நடிகர் ஸ்ரீநிவாசன் காலமானார்.

by Admin / 20-12-2025 09:24:55pm
மலையாள நகைச்சுவை நடிகர் ஸ்ரீநிவாசன் காலமானார்.

மலையாளத் திரை உலகில் தம் நகைச்சுவையால் கோலோச்சி வந்த நடிகர் ஸ்ரீநிவாசன் காலமானார். நடிகர் ரஜினிகாந்த் ,நடிகர் கமலஹாசன் ஆகியோருடன் நெருங்கிய நண்பராக விளங்கியவர். தமிழ் மற்றும் மலையாள திரை உலகிற்கு ஒரு பாலமாக இருந்தவர். ரஜினிகாந்துடன் திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றவர். திரைக்கதை எழுதுவதிலும் இயக்குவதிலும் வல்லவர். இவரது மறைவு மலையாள திரை உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரதுஉடல் கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும்திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via