2026 -கேன்ஸ் திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தனது அசத்தலான தோற்றம்
2026 கேன்ஸ் திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தனது அசத்தலான தோற்றத்தின் மூலம் உலக அளவில் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்
.இந்த ஆண்டின் கேன்ஸ் விழாவில், பிரபல சீன வடிவமைப்பாளர் செனி சான் பிரத்யேகமாக வடிவமைத்த அதிநவீன வெள்ளை நிற பேண்ட்சூட் மற்றும் டக்ஷிடோ போன்ற ஆடையில் ஐஸ்வர்யா ராய் தோன்றினார். இந்த உடையில் நேர்த்தியான லேஸ் வேலைப்பாடுகள் மற்றும் ஜொலிக்கும் கிரிஸ்டல் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.இறகு அலங்காரம் தோற்றத்தின் மிக முக்கிய அம்சமாக, அவரது தோள்களை அலங்கரித்த ஆடம்பரமான வெள்ளை நிற இறகு போவா மற்றும் கவ்ப் போன்ற வடிவமைப்பு ஒட்டுமொத்த உலக ஊடகங்களையும் கவர்ந்தது.பேட்டிகளுக்கான பிரத்யேக இறகு கவுன் உடை கேன்ஸ் விழாவின் பேட்டிகளின் போது, அவர் பியோலா நிலாவடிவமைத்த மெல்லிய வெளிர் நிற மாலை நேர கவுன் ஒன்றை அணிந்திருந்தார்.
கிரிஸ்டல் வேலைப்பாடுகள் நிறைந்த இந்த கவுனுடன், தோள்களில் இருந்து விழும் பளபளப்பான நாடகத்தனமான இறகு கேப் அவரது தோற்றத்திற்கு கூடுதல் ராணி போன்ற கம்பீரத்தை தந்தது தொடக்க விழா தோற்றம்இந்த ஆண்டின் தனது முதல் தோற்றத்திற்காக, இந்திய வடிவமைப்பாளர் அமித் அகர்வால் வடிவமைத்த 'லுமினாரா என்ற காஸ்மிக் நீல நிற கவுனை அணிந்திருந்தார்.இந்த ஆடையின் தோள் பகுதிகளில் இறகுகள் போன்ற விங்வடிவமைப்பு இருந்தது. இதனை உருவாக்க மட்டுமே சுமார் 1,500 மணி நேரம் கைவினை வேலைப்பாடுகள் செய்யப்பட்டன மோஹித் ராய்என்பவரால் ஸ்டைல் செய்யப்பட்ட ஐஸ்வர்யாவின் இந்த வருடத்து கேன்ஸ் ஆடைகள், வழக்கமான இளவரசி கவுன்களில் இருந்து மாறுபட்டு, நவீன ஃபேஷன் உலகிற்கு ஒரு 'பாஸ் லேடி' போன்ற கம்பீரத்தை வெளிப்படுத்தியதாக இணையவாசிகள் மற்றும் ஃபேஷன் விமர்சகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
Tags :


















