2 வயது குழந்தையை சென்னைக்கு கொண்டுவர ரூ.10 லட்சம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உடல்நலக்குறைவால் துருக்கி நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை சென்னைக்கு ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவர ரூ.10 லட்சம் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் தனது குழந்தையுடன் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த போது நடுவானில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவசரமாக துருக்கி நாட்டில் விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் கையிருப்பில் உள்ள பணம் முழுவதும் செலவானதால், சென்னைக்கு குழந்தையை ஏர்-ஆம்புலன்ஸ் வசதியுடன் அவர்களைக் கொண்டுவர ரூ.10 லட்சம் அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
Tags :


















