ராமதாஸ், அன்புமணி மோதல்.. தேர்தல் ஆணையத்தில் பஞ்சாயத்து

பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனை, தற்போது தேர்தல் ஆணையத்திற்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமதாஸ், அன்புமணி தரப்பினர் மாறி மாறி தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. “அன்புமணியின் பாமக தலைவர் பதவிக்காலம் முடிந்து விட்டது. இனி நானே தலைவர்” என ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கூறப்பட்டுள்ளது. “2026ஆம் ஆண்டு ஜூன் வரை பதவிக்காலம் உள்ளது” என அன்புமணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
Tags :